ஒளியின் ஓசை
oliyin osai..... ஒரு ஒளிப்படத்தொகுப்பு...
Labels
- Birds (10)
- Birds of India (1)
- Birds of Madurai (1)
- Flowers (1)
- Madurai Float Festival (1)
- The Hindu article about Rathika Ramasamy (1)
Tuesday, April 16, 2013
Wednesday, March 20, 2013
Sunday, July 22, 2012
Saturday, March 31, 2012
Monday, March 5, 2012
Thursday, December 29, 2011
பறவைகளைத் தேடியல்ல....
சின்னாட்களுக்கு முன் என் நண்பர் எனக்கு ஒரு சுட்டியை மின்னஞ்சல் செய்திருந்தார். அவர் ஏற்கனவே அந்த புகைப்பட வலைத்தளத்தைப் பார்த்து மிரண்டு என்று சொல்வது பொருந்துமா எனத்தெரியவில்லை, ஆனால் மிக மிக க(ல)வரப்பட்டு இருந்தார். கூடுதல் ஒருமுறை புலம்பித்தள்ளிவிட்டார். நானும் அந்த வலைத்தளத்தை பார்வையிட்டேன். சரி நமக்கெல்லாம் போட்டோக்ராஃபி சரிவராது என முடிவு செய்து.. ”எப்பிடித்தான் இப்பிடியெல்லாம் எடுக்கிறாய்ங்களோன்னு” மனசுக்குள்ளேயே நினைத்துக்கொண்டு ” பெட்டியை தொடவே தயங்கிகொண்டிருந்தேன்…. திடீரென்று ஒரு எண்ணம் ”உன்னால் முடிந்ததை செய்யவேண்டியதுதானே”என்று. இனிமேலாவது ”க்ளீனா” கழுவி விட்டது போன்று, ராமலக்ஷ்மி அவர்களின் புகைப்படங்கள் மாதிரி படங்கள் எடுக்க முயற்சிக்க வேண்டும் என எண்ணிக்கொண்டு, என் பெட்டியை எடுத்துக்கொண்டு, ஒரு ரவுண்டு சென்று வரலாமென்று புறப்பட்டேன். இம்முறை என் பயணம் யானைமலைக்கு…
யானைமலை.. சுமார் 20 வருடங்களுக்கு முன்பு எங்கள் வீட்டு மொட்டை மாடியிலிருந்து பார்த்தால் மிக நன்றாகத் தெரியும் இடையில் எந்த வித உயரமான கட்டிடங்களோ அல்லது மரங்களோ இல்லாத ஒரு காலம்.
. ஒருவழியாக கல்குவாரி இருக்கும் இடத்தை நோக்கி திரும்பினேன், போகும் வழியில் தான் சமணர்கள் கி.பி 9ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த குகையும் வடித்த சிற்பங்களும் இருக்கின்றன. அதைக்குறிக்கும் வண்ணம் அங்கு அறிவிப்புப் பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. அங்குள்ள கல்வெட்டுகளில் , தமிழ், கிரந்தம் மற்றும் வட்டெளழுத்துக்களாலன கல்வெட்டுகள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது சம்மந்தப்பட்ட தொல்லியல்துறை அவைகளின் மொழிபெயர்ப்பையும் அங்கு எழுதிவைத்தால் அங்கு செல்பவர்களுக்கு மிகவும் ஆர்வத்தை தூண்டுவதாகவும் பயனுள்ளதகவும் இருக்கும்..
சமணர் குகைக்கு செல்லும் வழி |
சமணர் குகை |
மகாவீரர்? |
மகாவீரர் |
வாசிக்க முடியுதா? |
அவைகளையும் பார்த்துவிட்டு, குவாரியை நோக்கி சென்றால் செல்லும் வழியில் தான் முருகன் கோவிலும், யோகநரசிம்மர் ஆலயமும் உள்ளன.
முருகன் கோவில்
யோக நரசிம்மர் ஆலயம்
பக்திமான்கள் அநேகம்பேரைக்காணமுடிந்தது. அதையும் தாண்டிப்போனால் கல்குவாரி……..மனிதர்களின் விடாமுயற்சியையும், பேராசையையும், அவர்களால் செய்யமுடிந்த பேரழிவையும், மதுரையின் பூதாகரமான வளர்ச்சியையும் பறை சாற்றிக்கொண்டிருந்தது.. கற்களை வெட்டி வெட்டி ஆழப்படுத்தப்பட்ட பள்ளங்களிலிருந்து இன்னும் கற்கள் வெட்டியெடுக்கப்படுகின்றன. குவாரிகளுக்கு செல்லும் பாதையின் இரு புறமும் மிக மிக ஆழமான பள்ளங்கள்.
குவாரியில் உள்ள “சாலை” |
கரணம் தப்பினால் மரணம் என்று சொல்லுவார்களே அதுபோல்.. பைக்கில் போகும் போது பயமாகத்தான் இருந்தது…இதில் தினம் தினம் கல் ஏற்றுவதற்கு லாரிகள் அவ்வழியேயும், கீழேயும் மேலேயும் இறங்கி ஏறிக்கொண்டிருக்கின்றனவாம்.
கல் குவாரிகள் எந்தவொருவேலையும் நடக்காமல் அமைதியாக இருந்தன.
குவாரியின் தோற்றங்கள்:
குவாரியின் தோற்றங்கள்:
குவாரி அமைதியாய்..... |
ஏனென்றால் குவாரி கை மாறிக்கொண்டிருந்த நேரமாம்….அங்கு வந்த ஒரு நபரிடம் பேசிக்கொண்டிருந்தபோது சில விஷயங்கள் சொன்னார்.. இந்த கல் குவாரிகள் அங்கு காலங்காலமாயிருந்தாலும், அதில் வேலை பார்க்கும் மக்களுக்கு எந்தவித முன்னேற்றமும் தரவில்லையென்பதுதான். ஆட்சிமாறினால் குவாரிஏலமெடுப்பவர்களும் மாறுவர் அதாவது சுமுகமாக எந்தவித பிரச்சினையுமின்றி ஏலவுரிமைகள் விட்டுக்கொடுக்கப்படும்… ஏலமெடுத்தவர்கள் நஷ்டப்படுவதில்லை.. போதுமான அளவு அவர்கள் “காம்பன்சேட்” செய்யப்படுவார்களாம் …..இருபது..முப்பது ஆண்டுகளுக்குமுன் குவாரிகளில் வேலை செய்பவர்களுக்கே குவாரிகள் சொந்தம் என்றான பின் அங்கு வேலை செய்தவர்களெல்லாம் குறுகுவாரி முதலாளிகள் ஆனார்களாம்….. இடம் அவர்களுடையதானதால் ஆட்களை வைத்து வேலை செய்யும் அவர்களுக்கு உற்பத்தியில் பாதியாம்… கல் உடைப்பவர்களுக்கு மீதியாம் அவர்கள் இன்னும் கல் உடைத்துக்கொண்டேயதானிருக்கிறார்கள்…….. உடைத்துக்கொண்டேதானிருப்பார்கள் என்றுதான் தோன்றுகிறது….
கடைசியில் அங்கு தனியே உட்கார்ந்திருந்த நீர்காக்கையை தவிர வேறிரண்டு பறவைகளையும் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது.அவைகள் கீழேயுள்ள படத்தில்… கண்டுபிடித்துக்கொள்ளுங்கள்..
கண்டுபிடித்துவிட்டீர்களா? |
Subscribe to:
Posts (Atom)